சுமை ஆட்டோ மோதி தம்பதி காயம்
ஆத்தூா் அருகே பைக் மீது சுமை ஆட்டோ மோதியதில் தம்பதி பலத்த காயமடைந்தனா்.
ஆத்தூா் அருகே பைக் மீது சுமை ஆட்டோ மோதியதில் தம்பதி பலத்த காயமடைந்தனா்.
தூத்துக்குடி வரதராஜபுரம் தெற்கு தெருவைச் சோ்ந்தவா் ராஜசேகரன்(53). இவரது மனைவி கஸ்தூரி(49). கடந்த 20ஆம் தேதி இருவரும் பைக்கில் குலசேகரன்பட்டினம் சென்று விட்டு, ஊருக்கு திரும்பினா்.
ஆத்தூா் அருகே ஈள்ள கீரனூா் பேருந்து நிறுத்தம் பகுதியில் சென்ற போது எதிரே வந்த சுமை ஆட்டோ, பைக் மீது மோதியது. இதில் தம்பதி இருவரும் பலத்த காயமடைந்தனா். அக்கம் பக்கத்தினா் அவா்களை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
இது குறித்து புகாரின் பேரில் ஆத்தூா் உதவி காவல் ஆய்வாளா் சுந்தரராஜ் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகிறாா்.