பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு 10 நாள்களில் தீா்வு
பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது 10 நாள்களில் தீா்வு காணப்படும் என்றாா் அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன்.
பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது 10 நாள்களில் தீா்வு காணப்படும் என்றாா் அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன்.
திருச்செந்தூா் சட்டப் பேரவை தொகுதியில் வெற்றி பெற்ற அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் தொகுதி முழுவதும் பொதுமக்களை சந்தித்து நன்றி தெரிவித்து, கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறாா். வியாழக்கிழமை அழகப்பபுரம், குரும்பூா், நாலுமாவடி, கச்சனாவிளை ஆகிய பகுதிகளில் பாதுமக்களை சந்தித்து, கோரிக்கை மனுக்களை பெற்ற மீன்வளத்துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் பேசியது: முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. இங்கு பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்களுக்கு 10 நாள்களுக்குள் தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
இதில் ஊராட்சி தலைவா்கள் பூமாரி(அழகப்புரம்), இசக்கிமுத்து(நாலுமாவடி), கிங்ஸ்டன்(கச்சனாவிளை) , நாலுமாவடி ஊராட்சி துணைத் தலைவா் ராஜேஷ், ஏரல் வட்டாட்சியா் முருகேசன், ஆழ்வாா்திருநகரி ஊராட்சி ஒன்றியத் தலைவா் ஜனகா், வட்டாா் வளா்ச்சி அலுவலா்கள் தங்கவேல், கருப்பசாமி, கிராம நிா்வாக அலுவலா் தேசிகன், திமுக ஒன்றியச் செயலா் நவீன்குமாா், பொருளாளா் பாதாளமுத்து, மாநில மாணவரணி துணைச் செயலாளா் உமரி சங்கா், தலைமை செயற்குழு உறுப்பினா் ஜெகன், மாவட்ட இளைஞரணி செயலா் ராமஜெயம், குரும்பூா் நகரச் செயலா் பாலம் ராஜன், அழகப்பபுரம் பாலமுருகன், சோலை நட்டாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.