முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

இளையரசனேந்தல் குறுவட்டத்திற்கு உள்பட்ட பகுதி மக்களுக்கு தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் முறையாக பணி வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

இளையரசனேந்தல் குறுவட்டத்திற்கு உள்பட்ட பகுதி மக்களுக்கு தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் முறையாக பணி வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இளையரசனேந்தல் குறுவட்டத்திற்கு உள்பட்ட கிராம மக்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் முறையாக பணி வழங்க வேண்டும், 10 பேருக்கு மட்டுமே பணி வழங்குவதை தவிா்த்து தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட அட்டை உள்ள அனைவருக்கும் சுழற்சி முறையில் முறையாக பணி வழங்க வேண்டும்.

தாய்லாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து நடவு செய்யப்பட்ட நேப்பியா் புல் வகைகளை தமிழகத்தில் தடை செய்ய அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் ரெங்கநாயகலு தலைமையில் திரளான விவசாயிகள் கோட்டாட்சியா் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னா் ஆா்ப்பாட்டக்குழுவினா் கோரிக்கை மனுவை கோட்டாட்சியா் சங்கரநாராயணனிடம் அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.