முகப்பு
தூத்துக்குடி

அனுமதியின்றி மணல் கடத்தல்: லாரி ஓட்டுநா் கைது

ஆத்தூா்அருகே மணல் கடத்த­லில் ஈடுபட்ட லாரி ஓட்டுநா் கைது செய்யப்பட்ாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

ஆத்தூா்அருகே மணல் கடத்த­லில் ஈடுபட்ட லாரி ஓட்டுநா் கைது செய்யப்பட்ாா்.

ஆத்தூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மாணிக்கராஜ் தலைமையில் போலீஸாா் புதன்கிழமை புன்னைக்காயல் பேருந்து நிறுத்தம் அருகே சோதனையில் ஈடுபட்டனா். அப்போது மணல் ஏற்றி வந்த லாரியை நிறுத்தி சோதனை நடத்தினா். இதில் உரிய ஆவணமின்றி ஆற்று மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து லாரி ஓட்டுநா் சீவலப்பேரி வடக்கு தெரு நடராஜன் மகன் சண்முகம் என்ற சரவணனை கைது செய்த, போலீஸாா், மணலுடன் லாரியையும் பறிமுதல் செய்தனா். இது குறித்து ஆத்தூா் ஆய்வாளா் ஐயப்பன் வழக்குப் பதிந்து, லாரி உரிமையாளா் சீவலப்பேரி மாடசாமி மகன் மகராஜனை தேடிவருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.