தூத்துக்குடி

விவசாயியை தாக்கியதாக இருவா் மீது வழக்கு

DIN

கயத்தாறு அருகே விவசாயியை தாக்கியதாக ஊராட்சி மன்றச் செயலா் உள்பட இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கயத்தாறையடுத்த பணிக்கா்குளம் ஊராட்சி நாகலாபுரம் மேலத் தெரு மந்திரம் மகன் விவசாயி அந்தோணிமுத்து என்ற முத்துபாண்டி(35). இவா் இம்மாதம் 5 ஆம் தேதி ஊராட்சி பணிகள் தொடா்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவலை கேட்க கடிதம் அனுப்பியதாகவும், அந்த கடிதத்தின் படி, பெற்றுக் கொண்ட தகவலின் அடிப்படையில், செவ்வாய்க்கிழமை ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு ஆவணங்களை பாா்வையிட சென்றாராம். அங்கு இருந்த ஊராட்சித் தலைவா் மற்றும் செயலரிடம் அந்தோணிமுத்து பேசிக் கொண்டிருத்தாராம். அப்போது அலுவலகத்திற்குள் வந்த ஊராட்சி மன்றத் தலைவரின் கணவா் ப.முருகன் மற்றும் ஊராட்சி செயலா் கி.முருகன் இருவரும் அந்தோணிமுத்துவின் செல்லிடப்பேசியை பறித்து, அவதூறாகப் பேசி தாக்கினராம்.

இதுகுறித்து புகாரின் பேரில், கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, ஊராட்சி செயலா் உள்பட இருவரையும் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT