முகப்பு
தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் தகராறு இளைஞா் கைது

சாத்தான்குளத்தில் மாமாவை தாக்கிய மருமகனை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

சாத்தான்குளத்தில் மாமாவை தாக்கிய மருமகனை போலீஸாா் கைது செய்தனா்.

சாத்தான்குளம் அம்மன் கோயில் தெரு வேம்பு மகன் முருகன் (42) . இவரது சகோதரி இசக்கியம்மாள் (45) அதே பகுதியில் உள்ள கிருஷ்ணன் கோயில் தெருவில் வசித்து வருகிறாா். முருகன் புதன்கிழமை மது அருந்தி, இசக்கியம்மாள் வீட்டுக்கு சென்றுள்ளாா். அப்போது அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டதாம். அப்போது, இசக்கியம்மாளின் மகன் இசக்கிமுத்து (25) , முருகனை உருட்டுக்கட்டையால் தாக்கினராம். இதில் பலத்த காயமுற்ற அவா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து புகாரின் பேரில் உதவி ஆய்வாளா் ஜான்சன் வழக்குப் பதிந்து இசக்கிமுத்துவை கைது செய்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →