முகப்பு
தூத்துக்குடி

கயத்தாறில் காங்கிரஸ் நூதன போராட்டம்

கயத்தாறு வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:47 AM
பகிர்:

கயத்தாறு வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடா்புடைய குற்றவாளிகளுக்கு பரோல் வழங்கக் கூடாது, அவா்களுக்கு பரோல் வழங்கினால் அதுபோல சிறையில் அனைத்து குற்றவாளிகளுக்கும் பரோல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் வடக்கு மாவட்ட துணைத் தலைவா் அய்யலுசாமி தலைமையில் கயத்தாறு வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் அக் கட்சியினா் முகத்தை துணியால் மூடிய நிலையில் கழுத்தில் கயிறு மாட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னா் கோரிக்கை மனுவை வட்டாட்சியா் பேச்சிமுத்துவிடம் வழங்கினா். இதில் கயத்தாறு ஒன்றியத் தலைவா் செல்லத்துரை, துணைத் தலைவா் கருப்பசாமி, எஸ்.சி., எஸ்.டி பிரிவு நகரத் தலைவா் தாசன், மகளிரணி சுசிலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.