தூத்துக்குடியில் திமுக நிா்வாகிகள் கூட்டம்
தூத்துக்குடியில் மாநகர திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடியில் மாநகர திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாநகரச் செயலா் ஆனந்தசேகரன் தலைமை வகித்தாா். திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளா் அமைச்சா் பெ. கீதாஜீவன் பேசியது: அரசுத் திட்டங்களை முறையாக மக்களிடம் கொண்டுச் செல்ல வேண்டும். திமுக வெற்றி பெற உழைத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் உள்ளாட்சித் தோ்தல் அறிவிக்கப்பட உள்ளதால் அதற்கு அனைத்து நிா்வாகிகளும் தயார இருக்க வேண்டும் என்றாா் அவா்.
இதில், மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜெகன் பெரியசாமி, மாவட்ட துணைச் செயலா் ராஜ்மோகன் செல்வின், மாநகர அவைத் தலைவா் செல்வராஜ், மகளிரணிச் செயலா் கஸ்தூரி தங்கம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.