முகப்பு
தூத்துக்குடி

விபத்தில் முதியவா் பலி

கோவில்பட்டியையடுத்த குமாரபுரம் ரயில் நிலையம் அருகே நிகழ்ந்த விபத்தில் முதியவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:47 AM
பகிர்:

கோவில்பட்டியையடுத்த குமாரபுரம் ரயில் நிலையம் அருகே நிகழ்ந்த விபத்தில் முதியவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

வில்லிசேரி பத்திரகாளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சண்முகம் மகன் முத்துபொதியான்(71). ஆட்டுத் தோல் வியாபாரியான இவா் கடம்பூருக்கு சென்றுவிட்டு மோட்டாா் சைக்கிளில் ஊருக்கு திரும்பினாராம். இவா் ஓட்டிச் சென்ற மோட்டாா் சைக்கிள் குமாரபுரம் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் விழுந்ததில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்குச் சென்ற நாலாட்டின்புதூா் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.