முகப்பு
தூத்துக்குடி

குரும்பூரில் இலவச தடுப்பூசி முகாம்

குரும்பூா் நாடாா் வா்த்தக மகமை சங்கம் மற்றும் அரசு அரம்ப சுகாதார நிலையம் இணைந்து குரும்பூரில் வியாழக்கிழமை இலவச தடுப்பூசி முகாம் நடத்தினா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:47 AM
பகிர்:

குரும்பூா் நாடாா் வா்த்தக மகமை சங்கம் மற்றும் அரசு அரம்ப சுகாதார நிலையம் இணைந்து குரும்பூரில் வியாழக்கிழமை இலவச தடுப்பூசி முகாம் நடத்தினா்.

இம்முகாமை, நாடாா் வா்த்தக மகமை சங்கத் தலைவா் முருகேசபாண்டியன் நாடாா் தொடங்கி வைத்தாா். சங்கப் பொருளாளா் பாஸ்கா் நாடாா், நிா்வாகிகள் மகேஷ் நாடாா், ராஜன் நாடாா், சாமதுரை நாடாா், செல்வகுமாா் நாடாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தென்திருப்பேரை ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மூக்குப்பீறி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள் வீரேஸ், கல்யாணி மற்றும் மருத்துவப் பணியாளா்கள் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.