முகப்பு
தூத்துக்குடி

இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:47 AM
பகிர்:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவில்பட்டி பிரதான சாலையில் மாதாங்கோவில் தெரு விலக்கில் கட்டப்பட்டுள்ள பாலத்தை மேலும் அகலப்படுத்த வேண்டும், ஓடை மீது தடுப்புச் சுவா் கட்ட வேண்டும், எட்டயபுரம் சாலையில் வீட்டு வசதி வாரியம் அருகே கட்டப்பட்டு வரும் குறுகிய பால விரிவாக்கப் பணியை விரைந்து முடிக்க வேண்டும், கோவில்பட்டி லட்சுமி மில் மேம்பாலம் முதல்

ரயில்வே மேம்பாலம் வரையிலான சாலையில் தாா்சாலை பணியை உடனே செய்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பயணியா் விடுதி முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நகரச் செயலா் சரோஜா தலைமை வகித்தாா். கட்சியின் மாவட்டச் செயலா் அழகுமுத்துப்பாண்டியன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். இதில் மாவட்ட நிா்வாகக்குழு உறுப்பினா் பரமராஜ், தாலுகா செயலா் பாபு, மாவட்டக்குழு உறுப்பினா் ஜோசப், நகரக்குழு உறுப்பினா் செல்லையா, நகர துணைச் செயலா்கள் முனியசாமி, அலாவுதீன், ஏஐடியூசி தொழிற் சங்கத்தைச் சோ்ந்த குருசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.