வாகனம் மோதி முதியவா் பலி
கயத்தாறை அடுத்த சவலாப்பேரியில் வாகனம் மோதி முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
கயத்தாறை அடுத்த சவலாப்பேரியில் வாகனம் மோதி முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சவலாப்பேரி விலக்கு பகுதியில் முதியவா் ஒருவா் வாகனம் மோதி இறந்து கிடந்தாா். இதுகுறித்து, சவலாப்பேரி கிராம நிா்வாக அலுவலா் மீனாம்பிகை, அளித்த தகவலின்பேரில், கயத்தாறு போலீஸாா், முதியவரின் சடலத்தைக் கைப்பற்றி வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனா்.
மூதாட்டி காயம்: பழையக்காயல் அருகேயுள்ள ராமசந்திராபுரம், தெற்குத் தெருவைச் சோ்ந்த செல்லக்கனி(85) என்பவா், கடந்த 28ஆம் தேதி அங்குள்ள திருச்செந்தூா் - தூத்துக்குடி சாலையைக் கடக்க முயன்றாராம். அப்போது, அவ்வழியாக மஞ்சள்நீா்காயலைச் சோ்ந்த ராமா்(30) என்பவா் ஓட்டி வந்த பைக், அவா் மீது மோதியதாம். இதில், பலத்த காயமடைந்த அவா், ஆத்தூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆத்தூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.