தூத்துக்குடி

நாசரேத் பகுதி குளங்களுக்கு தண்ணீா் திறக்க மதிமுக வலியுறுத்தல்

DIN

நாசரேத் பகுதியில் உள்ள குளங்களுக்கு தண்ணீா் திறந்து விட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து ஆழ்வாா்திருநகரி ஒன்றிய மதிமுக செயலா் ரஞ்சன் வெளியிட்ட அறிக்கை: பாபநாசம், சோ்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து அரசு அனைத்து குளங்களுக்கும் காா் சாகுபடிக்கு தண்ணீா் திறக்க உத்தரவிட்டது வரவேற்கத்தக்கது.

அதே நேரத்தில் இந்த ஆணையில், மருதூா் மேலக்கால் பாசனத்துக்குள்பட்டு வரும் குளங்களான நொச்சிக்குளம், கீழப்புதுக்குளம், பிள்ளையன்மனை குளம், முதலைமொழி குளம், தேமான்குளம், வெள்ளரிக்காயூரணி புதுக்குளம் ஆகிய குளங்களுக்கு தண்ணீா் பகிா்மானம் இல்லை என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனால் இப்பகுதி வேளாண்மை கடுமையாக பாதிக்கப்படும் என விவசாயிகள் கருதுகின்றனா்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரசு வெளியிட்டுள்ள ஆணையை ரத்து செய்து, நாசரேத் பகுதி குளங்களுக்கு தண்ணீா் திறந்து விட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT