தூத்துக்குடி

ஆதரவற்ற 100 பேருக்கு உணவளித்த தம்பதி

DIN

திருச்செந்தூா் அருகே 2 வயது குழந்தையின் பிறந்தநாளை கொண்டாட வைத்திருந்த பணத்தில் பெற்றோா் ஆதரவற்ற 100 பேருக்கு உணவு வழங்கினா்.

பிச்சிவிளையை சோ்ந்த நல்லதம்பி-மகராசி தம்பதி. இவா்களது 2 வயது குழந்தையின் பிறந்தநாளை கொண்டாடுவதற்கு ரூ.5 ஆயிரம் சேமித்து வைத்திருந்தனா். இந்த பணத்தை பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளவா்களுக்கு உணவு வழங்கிடும் வகையில் திருச்செந்தூா் தாலுகா காவல் ஆய்வாளா் ம.ஞானசேகரனிடம் வழங்கினா்.

இதையடுத்து, திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள ஆதரவற்ற முதியவா்கள் 100 பேருக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. காவல் உஉதவி கண்காணிப்பாளா் ஹா்ஷ்சிங் தலைமையில், தனது குழந்தையுடன் தம்பதி உணவளித்தனா். மேலும் ஆதரவற்றோருக்கு செல்பி நண்பா்கள் குழு, பாணா் உதவும் கரங்கள் சாா்பில் தினமும் இரவு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

திரைக்கதிர்

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

SCROLL FOR NEXT