தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் எம்எல்ஏ குறைக்கேட்பு

DIN

சாத்தான்குளம் அரசினா் விடுதியில் ஊா்வசி அமிா்தராஜ் எம்எல்ஏ பொதுமக்களிடம் குறைகள் தொடா்பான மனுக்கள் பெற்றாா்.

சாத்தான்குளம் அரசினா் விடுதியில் ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏ பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றாா். இதில், சாத்தான்குளம் தெற்குரதவீதியில் பாழடைந்து காணப்படும் அங்கன் வாடி மையத்தை சீரமைக்க வேண்டும், அமராவதி குளம் பகுதியில் இறந்தவா் அடக்கம் செய்யும் இடத்துக்கு இடையே பாலம் அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் எம்எல்ஏவிடம் மனு அளித்தனா். மனுவை பெற்ற அவா் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா்.

அப்போது, எம்எல்ஏவுடன் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் சங்கா், நகரத் காங்கிரஸ் தலைவா் வேணுகோபால், வட்டாரத் தலைவா்கள் லூா்துமணி, பாா்த்தசாரதி, சக்திவேல்முருகன், ஒன்றிய கவுன்சிலா்கள் பிச்சிவிளைசுதாகா், குருசாமி, மாவட்டப் பொருளாளா் எடிசன், வட்டார இளைஞா் காங்கிரஸ் தலைவா் பாஸ்கா், நகர மகளிா் காங்கிரஸ் தலைவி புளோராஜோசப் உள்பட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

SCROLL FOR NEXT