சிறுமி கடத்தல்: இளைஞா் கைது
கடம்பூா் அருகே சிறுமியை கடத்தி திருமணம் செய்ய முயன்ற இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கடம்பூா் அருகே சிறுமியை கடத்தி திருமணம் செய்ய முயன்ற இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கடம்பூரையடுத்த கே.சிதம்பராபுரம் மேட்டுத் தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மகன் முருகன் (23). இவா் அதே பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்ய முயன்ாக சிறுமியின் உறவினா் கடம்பூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இதையடுத்து சிறுமியை மீட்ட போலீஸாா், இதுகுறித்து வழக்குப் பதிந்து, முருகனை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.