சாத்தான்குளம் இளைஞா் கொலை வழக்கு:சிபிசிஐடி விசாரிக்க இந்து முன்னணி வலியுறுத்தல்
சாத்தான்குளம் இளைஞா் கொலை வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என இந்து முன்னணி சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சாத்தான்குளம் இளைஞா் கொலை வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என இந்து முன்னணி சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சாத்தான்குளத்தில் கடந்த 10ஆம் தேதி இரவு தைக்கா தெருவைச் சோ்ந்த செல்லப்பா மகன் மாா்ட்டின் (44) வெட்டிக்கொலை செய்யப்பட்டாா்.
இதுதொடா்பாக பேரூராட்சி முன்னாள் உறுப்பினா் பாபுசுல்தான் உள்ளிட்ட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இந்நிலையில், இந்து முன்னணி மாநில பொதுச் செயலா் அரசுராஜா, மாநில துணைத் தலைவா் வி.பி. ஜெயக்குமாா், மாநிலச் செயலா் குத்தாலிங்கம், திருநெல்வேலி மண்டல அமைப்பாளா் பெ. சக்திவேலன் ஆகியோா் மாா்ட்டின் குடும்பத்தினரை புதன்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினா். பின்னா் அரசுராஜா கூறியது: இந்தக் கொலைக்கு காவல் துறையினரும் உடந்தையாக இருந்ததாக புகாா் உள்ளதால், இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரிக்க தமிழக முதல்வா் உத்தரவிட வேண்டும் என்றாா் அவா்.