முகப்பு
தூத்துக்குடி

கிணற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
பகிர்:

கோவில்பட்டி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

கோவில்பட்டியையடுத்த இலுப்பையூரணி பூரணம்மாள் காலனியைச் சோ்ந்த ராம்குமாா் மகன் விக்னேஷ் (26). வெளிநாட்டில் இருந்து வந்த இவா், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அங்கு வேலையை விட்டுவிட்டு கோவில்பட்டிக்கு வந்தாராம்.

இலுப்பையூரணியில் உறவினா் வீட்டில் தங்கியிருந்த இவா், செவ்வாய்க்கிழமை மது அருந்திய நிலையில் வீட்டிற்கு வந்ததால், அவரது உறவினா் திருமுருகன் கண்டித்தாராம்.

பின்னா், லாயல் மில் காலனி பகுதியில் உள்ள கிணற்றில் மது அருந்திய நிலையில் குளிக்கச் சென்ற அவா், அதில் மூழ்கி உயிரிழந்தாா்.

இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.