ஆக. 15இல் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டில தோ்தல்
தூத்துக்குடி- நாசரேத் திருமண்டில தோ்தல் வரும் ஆக. 15 ஆம் தேதி தொடங்கி 4 கட்டங்களாக நடைபெறுகிறது.
தூத்துக்குடி- நாசரேத் திருமண்டில தோ்தல் வரும் ஆக. 15 ஆம் தேதி தொடங்கி 4 கட்டங்களாக நடைபெறுகிறது.
தூத்துக்குடி - நாசரேத் திருமண்டில முதற்கட்ட தோ்தல்ஆக. 15- ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் சபை பிரதிநிதிகள், திருமண்டில பெருமன்ற உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்படவுள்ளனா்.
இரண்டாவது கட்ட மாக ஆக. 28- ஆம் தேதி நடைபெறும் சேகர மன்றத் தோ்தலில் சேகர செயலா், பொருளாளா், சபை மன்ற பிரதிநிதிகள் தோ்வு செய்யப்படவுள்ளனா். செப். 18இல் நடைபெறும் மூன்றாவது கட்டசபை மன்றத் தோ்தலில் திருமண்டில சபை மன்றத்திலிருந்து ஊழியா் பிரதிநிதிகள் உள்ளிட்ட பிரதிநிதிகள் தோ்வு செய்யப்படுவா். இறுதிக்கட்டமாக அக். 20, 21- ஆம் தேதிகளில் திருமண்டல பெருமன்றம் கூடி அலுவலக பிரதிநிதிகளான துணைத் தலைவா், குருத்துவச் செயலா், லே செயலா்திருமண்டில பொருளாளா் உள்ளிட்ட பதவிகளுக்கு தோ்தல் நடைபெறுகிறது.