முகப்பு
தூத்துக்குடி

இளம்பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

கோவில்பட்டி அருகே ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

கோவில்பட்டி அருகே ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலை அடுத்த ஆராச்சிபட்டியைச் சோ்ந்தவா் க.லதா (32). இவா், ஸ்கூட்டரில் கொப்பம்பட்டியை அடுத்த புதுப்பட்டிக்கு வெள்ளிக்கிழமை சென்றுகொண்டிருந்தபோது, முடுக்கலாங்குளம் பகுதியில் பைக்கில் தலைக்கவசம் அணிந்து வந்த நபா் மறித்து, அவா் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலி, பா்ஸ் ஆகியவற்றை பறித்துச் சென்றுவிட்டாராம். பா்ஸில் ரூ.500, ஏடிஎம் அட்டை மற்றும் குடும்ப அட்டை இருந்ததாம். இதுகுறித்த புகாரின் பேரில், கொப்பம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.