முகப்பு
தூத்துக்குடி

விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

இளையரசனேந்தல் குறுவட்டத்தை, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்கக் கோரி கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகம் முன் விவசாயிகள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

இளையரசனேந்தல் குறுவட்டத்தை, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்கக் கோரி கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகம் முன் விவசாயிகள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இளையரசனேந்தல் குறுவட்டத்தை குருவிகுளம் ஒன்றியத்திலிருந்து பிரித்து, கோவில்பட்டி ஒன்றியத்துடன் இணைக்க வேண்டும் அல்லது இளையரசனேந்தலை தலைமையிடமாகக் கொண்டு தனி ஒன்றியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தேசிய விவசாயிகள் சங்கத்தினா் சாா்பில் அதன் தலைவா் ரெங்கநாயகலு தலைமையில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பின்னா் கோரிக்கை மனுவை கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் முருகானந்தத்திடம் வழங்கினா். இதில், இளையரசனேந்தல் குறுவட்ட உரிமை மீட்புக் குழுத் தலைவா் முருகன், துணை ஒருங்கிணைப்பாளா் கற்பூரராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.