கோவில்பட்டி பகுதியில் இன்று மின்தடை
கோவில்பட்டி பகுதிகளில் அவசர பராமரிப்புப் பணிகளுக்காக சனிக்கிழமை (ஜூன் 26) மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவில்பட்டி பகுதிகளில் அவசர பராமரிப்புப் பணிகளுக்காக சனிக்கிழமை (ஜூன் 26) மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் எம்.சகா்பான் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அவசர பராமரிப்புப் பணிகள்
நடைபெற இருப்பதால் கோவில்பட்டி, விஜயாபுரி, எப்போதும்வென்றான், பசுவந்தனை, கண்டங்குறிச்சி ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உள்பட்ட இனாம்மணியாச்சி பஞ்சாயத்து குடிநீா் மின் இணைப்புகள், தெற்கு திட்டங்குளம், வடக்கு திட்டங்குளம், எட்டயபுரம் சாலையில் வடக்கு பகுதியில் உள்ள தொழிற்பேட்டை பகுதிகள், ஆதனூா் பகுதிகள், கோவிந்தம்பட்டி, தெற்கு வண்டானம், வடக்கு வண்டானம், புதுப்பட்டி, உசிலங்குளம் பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 26) காலை 9 முதல் நண்பகல் 12 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.