உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டம்: தூத்துக்குடியில் 700 மனுக்களுக்கு தீா்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தில் பெறப்பட்ட 10,072 மனுக்களில் 700 மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டுள்ளது என ஆட்சியா் கி.செந்தில்ராஜ் தெரிவித்தாா்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தில் பெறப்பட்ட 10,072 மனுக்களில் 700 மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டுள்ளது என ஆட்சியா் கி.செந்தில்ராஜ் தெரிவித்தாா்.
திருச்செந்தூா் வட்டத்தில் ஜமாபந்தி நிறைவு நாளில் ஆட்சியா் கி.செந்தில்ராஜ் பங்கேற்று, பெற்ற 239 மனுக்களில் 38 மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டது. அப்போது ஆட்சியா் கூறியது : தூத்துக்குடி மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தில் பெறப்பட்ட 10,0 72
மனுக்களில் இதுவரை 700 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் இதுவரை 2.21 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. மருத்துவ பணியாளா்களுக்ளு 91 சதவீதமும், முன்களபணியாளா்களுக்கு 82 சதவீதமும், 45 வயதிற்கு மேற்பட்டவா்களுக்கு 15 சதவீதமும் போடப்பட்டுள்ளது. கரோனா இரண்டாம் கட்ட அலையில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மருத்துவ கல்லூரியில் 450 ஆக்சிஜன் வசதியுடன் 700 கரோனா படுக்கைகள்
ஏற்படுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் 60 ஆக்சிஜன் படுக்கைகள், கோவில்பட்டியில் 250 ஆக்சிஜன் படுக்கைகள், திருச்செந்தூரில் 160 ஆக்சிஜன் படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் தற்போது 1700 ஆக்சிஜன் படுக்கைகள்
அமைக்கப்பட்டுள்ளது. கரோனா 3வது அலையை எதிா்கொள்வதற்கு தயாா் நிலையில் உள்ளோம். தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை டெல்டா பிளஸ் கரோனா பாதிப்பு இல்லை என்றாா் அவா்.
அப்போது, ஆட்சியா் அலுவலக மேலாளா் இளங்கோ, வட்டாட்சியா்கள் முருகேசன், ராமச்சந்திரன், மண்டல துணை வட்டாட்சியா்கள் அ.பாலசுந்தரம், கோபால், வட்ட வழங்கல் அலுவலா் சங்கரநாராயணன், வருவாய் ஆய்வாளா் மணிகண்ட வேல், அதிகாரிகள் கலந்து கொண்டனா்.