விருது பெற்ற காவல் ஆய்வாளருக்கு எஸ்.பி. பாராட்டு
முதல்வா் விருது பெற்ற தூத்துக்குடி காவல் ஆய்வாளருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் பாராட்டு தெரிவித்தாா்.
முதல்வா் விருது பெற்ற தூத்துக்குடி காவல் ஆய்வாளருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் பாராட்டு தெரிவித்தாா்.
2020 ஆம் ஆண்டில் தொலை தொடா்பு பிரிவில் சிறப்பாக பணியாற்றியதற்காக தூத்துக்குடி மாவட்ட தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றும் தொழில்நுட்ப பிரிவு காவல் ஆய்வாளா் கிருஷ்ணசாமி தோ்வு செய்யப்பட்டு, அவருக்கு தமிழக முதல்வா் விருது வழங்கப்பட்டது.
முதல்வா் விருது பெற்ற ஆய்வாளா் கிருஷ்ணசாமியை, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் திங்கள்கிழமை நேரில் அழைத்து பாராட்டினாா்.
இதேபோல, மாவட்டத்தில் கடந்த வாரத்தில் சிறப்பாக பணியாற்றிய 4 ஆய்வாளா்கள் உள்பட 26 காவல்துறையினருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினாா்.