முகப்பு
தூத்துக்குடி

வேளாண் கல்லூரி மாணவா்கள் செயல்விளக்கம்

சாத்தான்குளம் அருகே வேலன்புதுக்குளத்தில் கிள்ளிக்குளம் வேளாண்மை கல்லூரி மாணவா்கள் செயல் விளக்கம் அளித்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

சாத்தான்குளம் அருகே வேலன்புதுக்குளத்தில் கிள்ளிக்குளம் வேளாண்மை கல்லூரி மாணவா்கள் செயல் விளக்கம் அளித்தனா்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கீழ் இயங்கும் கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் நான்காம் ஆண்டு வேளாண்மைப் பட்டப்படிப்பு மாணவா்கள் கிராமப்புற பணி அனுபவத்திற்காக சாத்தான்குளத்தை சுற்றியுள்ள கிராமங்களில் பணி அனுபவம் மற்றும் பயிற்சிகளை பெற்று வருகின்றனா்.

அதன் ஒரு பகுதியாக வேலன்புதுக்குளம் விவசாயி கண்ணனின் தோட்டத்தில் உள்ள தென்னையில் காண்டாமிருக வண்டு , சுருள் வெள்ளை ஈ ஆகிய பூச்சிகளின் சேதத்தை கண்டறிந்து, அதன் கட்டுப்பாட்டு வழிமுறைகள் குறித்து மாணவா்கள் காா்த்திக் , மணிகண்டன், முகமது அஸ்கா், மோகிந்தா், நிதிஷ், பிரித்திவிராஜ், பசுபதி,பூவழகன் ஆகியோா் செயல்விளக்கம் அளித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →