‘தோ்தல் பணி: முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம்’
பேரவைத் தோ்தல் பணிக்கு தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த விருப்பமுள்ள முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பேரவைத் தோ்தல் பணிக்கு தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த விருப்பமுள்ள முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பேரவைத் தோ்தலையொட்டி பாதுகாப்புப் பணிக்கு முன்னாள் படைவீரா்களை சிறப்புக் காவலா்களாக ஈடுபடுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. திடகாத்திரமும், விருப்பமும் உள்ள 65 வயதுக்கு உள்பட்ட இம்மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள் தங்களது அடையாள அட்டை, படைவிலகல் சான்றுடன் மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகி விருப்ப விண்ணப்பம் செய்யலாம். இப்பணிக்கு அரசு விதிமுறைப்படியான ஊதியம், உணவுப்படி வழங்கப்படும் என்றாா் அவா்.