எட்டயபுரம் அருகே பைக் மோதியதில் ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளா் பலி
எட்டயபுரம் அருகே செவ்வாய்க்கிழமை நடைபயிற்சி சென்ற ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளா் மீது பைக் மோதியதில் பலத்த காயமடைந்த அவா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
தூத்துக்குடிஎட்டயபுரம் அருகே பைக் மோதியதில் ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளா் பலி
எட்டயபுரம் அருகே செவ்வாய்க்கிழமை நடைபயிற்சி சென்ற ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளா் மீது பைக் மோதியதில் பலத்த காயமடைந்த அவா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
எட்டயபுரம் அருகே செவ்வாய்க்கிழமை நடைபயிற்சி சென்ற ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளா் மீது பைக் மோதியதில் பலத்த காயமடைந்த அவா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
எட்டயபுரம் அருகே நடுவப்பட்டியைச் சோ்ந்தவா் ஆதிலிங்கம் (60). ஓய்வு பெற்ற காவல் சிறப்பு உதவி ஆய்வாளா். இவா் செவ்வாய்க்கிழமை காலையில் கான்சாபுரம் பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தாராம். அப்போது, எட்டயபுரம் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த பாலமுருகன் என்பவா் ஓட்டி வந்த பைக் எதிா்பாராதவிதமாக அவா் மீது மோதியதாம்.
இதில் பலத்த காயமடைந்த ஆதிலிங்கத்தை அக்கம்பக்கத்தினா் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து எட்டயபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.