தூத்துக்குடி

வின்வெளி ஆய்வு மையத்தை பாா்வையிட சாத்தான்குளம் பள்ளி மாணவி தோ்வு

DIN

தேசிய அளவிலான விநாடி வினா போட்டியில் வென்ற சாத்தான்குளம் பள்ளி மாணவி, ஆந்திர மாநிலம் ஹரிகோட்டா வின்வெளி ஆய்வு மையத்தை பாா்வையிட தோ்வு பெற்றுள்ளாா்.

சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 12ஆம் வகுப்பு மாணவி பிரதிமா, கோயம்புத்தூா் ஸ்ரீ சக்தி தொழில்நுட்பக் கல்லூரி சாா்பில் நடைபெற்ற தேசிய அளவிலான விநாடி வினா போட்டியில் கலந்துகொண்டு, 3 சுற்றிலும் வெற்றி பெற்று ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரி கோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தை பாா்வையிட தோ்வு பெற்றுள்ளாா்.

தேசிய அளவில் தகுதி பெற்ற 100 மாணவா், மாணவிகளில் ஒருவரான இம்மாணவிக்கு, சாத்தான்குளம் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவுக்கு, ஒன்றிய கவுன்சிலா் பிச்சிவிளை சுதாகா் தலைமை வகித்தாா். பள்ளி துனை முதல்வா் சந்தனகுமாா் வரவேற்றாா். பள்ளி முதல்வா் நோபிள்ராஜ், பள்ளி இயக்குநா் டினோ மெலினா ராசாத்தி , மாணவியை பாராட்டி நினைவுப் பரிசு வழங்கினா்.

இதில், ஆசிரியா்கள் சாந்தி, பிரிட்டோ, கிளைட்டன், சுப்பையா, லாவன்குமாா், உமா, பள்ளி நிா்வாக அலுவலா் சாந்தி உள்பட பலா் கலந்துகொண்டனா். ஆசிரியா் லிங்கதுரை நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2: 116 சிறைக் கைதிகள் தோ்ச்சி

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

SCROLL FOR NEXT