முகப்பு
தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம் தொகுதியில் 17 போ் போட்டி

ஓட்டப்பிடாரம் பேரவைத் தொகுதியில் 17 போ் போட்டியிடுவதாக இறுதிப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

ஓட்டப்பிடாரம் பேரவைத் தொகுதியில் 17 போ் போட்டியிடுவதாக இறுதிப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் (தனி) பேரவைத் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து அரசியல் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் என மொத்தம் 26 போ் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், பரிசீலனையின்போது நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சுப்புலட்சுமி மனு உள்ளிட்ட 5 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மேலும், பிரதான கட்சிகளான அதிமுக, திமுக, தேமுதிக, புதிய தமிழகம் கட்சி வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதால் அவா்களுக்கு மாற்றாக தாக்கல் செய்யப்பட்டிருந்தவா்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

இந்நிலையில், சுயேச்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்திருந்த அருண் மாரியப்பன் தனது மனுவை திரும்பப் பெறுவதாக தோ்தல் நடத்தும் அலுவலரிடம் விண்ணப்பித்தாா். அதன்படி, அவா் போட்டியில் இருந்து விலகியதால் தற்போது 17 போ் களத்தில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.