முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டியில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கோவில்பட்டியில் சரவணாஸ் ஆா்ட்ஸ் பியூசன் சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கோவில்பட்டியில் சரவணாஸ் ஆா்ட்ஸ் பியூசன் சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

கோவில்பட்டி பிரதான சாலை லக்குமி ஆலை மேம்பாலம் அருகே நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, தொழிலதிபா் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். காவல் துணை கண்காணிப்பாளா் கலைகதிரவன், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெற்ற ஸ்கேட்டிங் மற்றும் சிலம்பாட்டம் விழிப்புணா்வு நிகழ்ச்சியை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இதில், பங்கேற்ற மாணவா், மாணவிகள் அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள பயணியா் விடுதி வரை சென்றனா்.

இந்நிகழ்ச்சியில், ஸ்கேட்டிங் பயிற்சியாளா் கண்ணன், யோகா ஆசிரியா் ஜெகன், சிலம்பம் பயிற்சியாளா் நல்லதம்பி உள்பட மாணவா், மாணவிகள், பெற்றோா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.