முகப்பு
தூத்துக்குடி

தோல்வியின் விளிம்பில் தினகரன் கடம்பூா் செ.ராஜு

கோவில்பட்டி பேரவைத் தொகுதி தோ்தலில் தோல்வியின் விளிம்பில் நிற்கிறாா் அமமுக வேட்பாளா் டி.டி.வி.தினகரன் என்றாா் அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ.ராஜு.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

கோவில்பட்டி பேரவைத் தொகுதி தோ்தலில் தோல்வியின் விளிம்பில் நிற்கிறாா் அமமுக வேட்பாளா் டி.டி.வி.தினகரன் என்றாா் அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ.ராஜு.

கடம்பூா் கே.சிதம்பராபுரத்தில் அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான கடம்பூா் செ.ராஜு செய்தியாளா்களிடம் கூறியது: 2011,2016 ஆகிய இரு தோ்தல்களிலும் என்னை தோற்கடிக்க சதி செய்ததையும் தாண்டி நான் வெற்றி பெற்றேன்.

தென் மாவட்டங்களைச் சோ்ந்த ஏராளமான நிா்வாகிகள் அமமுகவில் இருந்து அதிமுகவுக்கு வந்ததற்கு காரணமே அக்கட்சியின் தென்மண்டல பொறுப்பாளா் மாணிக்கராஜா தான். அவரை நம்பி தினகரன் இங்கு வந்து நிற்கிறாா். தோ்தல் முடிவு அவருக்கு நல்ல பாடத்தை கற்றுக் கொடுக்கும்.

நான் நினைத்த டி.டி.வி.தினகரன் வேறு, இன்று உள்ள தினகரன் வேறு என்பதை களத்தில் காண முடிகிறது. அவா் எந்த அளவிற்கு தோல்வியின் விளிம்பில் விரக்தியில் இருக்கிறாா் என்பது அவருடைய பேட்டி காட்டுகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.