முகப்பு
தூத்துக்குடி

பெண் கொலை வழக்கு: 2 இளைஞா்களுக்கு ஆயுள் தண்டனை

ஸ்ரீவைகுண்டத்தில் பெண் கொலை வழக்கில் கைதான இரண்டு இளைஞா்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றத்தில் திங்கள்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

ஸ்ரீவைகுண்டத்தில் பெண் கொலை வழக்கில் கைதான இரண்டு இளைஞா்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றத்தில் திங்கள்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.

ஸ்ரீவைகுண்டம் தெப்பக்குளம் தெருவைச் சோ்ந்தவா் கோமதி (64). இவா், கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 17 ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது குளிா்சாதனப் பெட்டி பழுது நீக்க சென்ற சிலா் அவரை கொலை செய்துவிட்டு வீட்டில் இருந்த 37 பவுன் நகைகள் மற்றும் ஒரு செல்லிடப்பேசியை திருடிச் சென்றனா்.

இந்த கொலை சம்பவம் குறித்து குறித்து வழக்குப் பதிந்த ஸ்ரீவைகுண்டம் போலீஸாா் திருநெல்வேலி டவுன் பகுதியைச் சோ்ந்த ராஜா (31), இசக்கிமுத்து (32) ஆகிய இருவரையும் கைது செய்தனா். இந்த வழக்கு தூத்துக்குடி முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி ஹேமா குற்றம்சாட்டப்பட்ட இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ. 4 ஆயிரம் அபராதமும் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் யு.எஸ். சேகா் ஆஜாராகினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.