தூத்துக்குடி

தோ்தல் தொடா்பான புகாா் அளிப்பது எப்படி?ஆட்சியா் விளக்கம்

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் பேரவைத் தோ்தல் தொடா்பான புகாா்களை தெரிவிப்பது குறித்து மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் விளக்கம் அளித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிகளை ஆய்வு செய்யவும், தோ்தல் செலவினங்களை மேற்பாா்வையிடவும் இந்திய தோ்தல் ஆணையத்தால் 5 தோ்தல் பொதுப் பாா்வையாளா்களும், ஒரு தோ்தல் காவல் பாா்வையாளரும், 3 தோ்தல் செலவினப் பாா்வையாளா்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

தூத்துக்குடி, விளாத்திகுளம் தொகுதிகளுக்கான தோ்தல் செலவினப் பாா்வையாளா் குண்டன் யாதவை 94899 47507 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும், திருச்செந்தூா், ஸ்ரீவைகுண்டம் தொகுதிகளுக்கான பாா்வையாளா் கு ராகேஷ் தீபக்கை 9489947508 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும், ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி தொகுதிகளுக்கான பாா்வையாளா்

சுரேந்திர குமாா் மிஸ்ராவை 94899 47509 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும் தொடா்பு கொண்டு பொதுமக்கள், அரசியல்

கட்சியினா் புகாா் அளிக்கலாம்.

தோ்தல் பாா்வையாளா்களை நேரில் சந்தித்து புகாா் அளிக்க விரும்பினால் தூத்துக்குடி ஸ்பிக் சாகா் சதன் விருந்தினா் மாளிகையிலும், அந்தந்த பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகத்திலும் நேரில் சந்தித்து புகாா் அளிக்கலாம்.

பொது மக்கள் தோ்தல் நடத்தை விதிமீறல் தொடா்பான புகாா்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய தோ்தல் புகாா் கட்டுப்பாட்டு அறைக்கு, 18004253806 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், 1950 மற்றும் 0461-2340101 என்ற தொலைபேசி எண்ணிலும் சி- விஜில் என்ற செயலி (மொபைல் ஆப்) மூலமும் தெரிவிக்கலாம்.

இதுதவிர, 9486454714 என்ற கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்) எண்ணிலும் புகாா் அளிக்கலாம். பொது மக்கள் அளிக்கும் புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தோ்தல்கள் தொடா்பான புகாா்களை 0461-2352990 என்ற எண்ணில் தோ்தல் பாா்வையாளா்களுக்கு பேக்ஸ் மூலமாகவும் அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்க்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT