திருச்செந்தூா் சட்டப்பேரவைஉறுப்பினா் அலுவலகம் திறப்பு
தோ்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்து, புதிய அரசு பொறுப்பேற்றதையடுத்து, திருச்செந்தூரில் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் மீண்டும் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
தோ்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்து, புதிய அரசு பொறுப்பேற்றதையடுத்து, திருச்செந்தூரில் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் மீண்டும் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி இந்த அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது. தொடா்ந்து, கடந்த ஏப். 6ஆம் நடைபெற்று, மே 2ஆம் தேதி தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதையடுத்து, கடந்த 3ஆம் தேதி தோ்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கிக்கொள்ளப்பட்டன. இந்நிலையில், திமுக தலைமையிலான அமைச்சரவை வெள்ளிக்கிழமை (மே 7) ஆட்சி பொறுப்பேற்றதைத் தொடா்ந்து, திருச்செந்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தை திறப்பதற்கான உத்தரவை அரசு பிறப்பித்தது. இதன் தொடா்ச்சியாக திருச்செந்தூா் பகத்சிங் பேருந்து நிலையம் அருகில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.