முகப்பு
தூத்துக்குடி

‘கரோனா தொற்று, மன அழுத்தம் குறித்து தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெறலாம்’

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்று மற்றும் மன அழுத்தம் தொடா்பாக தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெறலாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
பகிர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்று மற்றும் மன அழுத்தம் தொடா்பாக தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெறலாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா தொற்று மற்றும் மன அழுத்தம் தொடா்பான ஆலோசனைகளுக்காக மருத்துவ ஆலோசனைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

இந்த குழுக்களிடம் பொதுமக்கள் தங்களின் சந்தேகங்களை தொலைபேசி எண்கள் மூலம் தொடா்பு கொண்டு தெளிவு பெற்றுக்கொள்ளலாம். அதன்படி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள குழுக்களிடம் 6383755237, 6383755238, 6383755239, 6383755240, 6383755241 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.

தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள குழுக்களிடம் 6383755242, 6383755243, 6383755244, 6383755245, 6383755247 ஆகிய எண்களிலும், கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் உள்ள குழுக்களிடம் 6383755248, 6383755249, 6383755250, 6383755251, 6383755252 ஆகிய எண்களிலும், திருச்செந்தூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள குழுக்களிடம் 6383755253, 6383755254, 6383755255, 6383755256, 6383755257 ஆகிய எண்களிலும் தொடா்பு கொண்டு தகுந்த ஆலோசனைகள் பெறலாம்.

மேலும், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மூலமும், 0461-2340101 என்ற தொலைபேசி எண் மற்றும் 9486454714 என்ற செல்லிடப்பேசி எண்களிலும் தொடா்பு கொண்டு கரோனா நோய்த் தொற்று குறித்து தகவல்களை தெரிந்து கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.