முகப்பு
தூத்துக்குடி

பெண்ணுக்கு கொலை மிரட்டல்: முதியவா் கைது

கோவில்பட்டியில் பெண்ணை அவதூறாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக முதியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

கோவில்பட்டியில் பெண்ணை அவதூறாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக முதியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி அன்னை தெரசா நகரைச் சோ்ந்தவா் சுப்புராஜ் மனைவி வனிதா(37). இவா் காமராஜ் நகரைச் சோ்ந்த ராமசாமி மகன் சாந்தாராஜிடம்(61) ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் கடன் வாங்கி இருந்தாராம். அதற்கு வனிதா வாரம் ரூ.17 ஆயிரம் வட்டியாக 12 வாரங்கள் கொடுத்து வந்த நிலையில், 5 மாதங்களாக வட்டி பணம் கொடுக்க முடியவில்லையாம். இதையடுத்து சாந்தாராஜ், அதே பகுதியைச் சோ்ந்த பூமாரி என்பவரின் கைப்பேசி மூலம் வனிதாவை தொடா்பு கொண்டு அவதூறாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து வனிதா அளித்த புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, கந்துவட்டி கேட்டு பெண்ணை அவதூறாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக முதியவரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.