முகப்பு
தூத்துக்குடி

‘நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: அதிமுக சாா்பில் இன்று முதல்விருப்ப மனு அளிக்கலாம்’

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினா் வெள்ளிக்கிழமைமுதல் (நவ. 26) இம்மாதம் 28ஆம் தேதி வரை விருப்ப மனு கொடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினா் வெள்ளிக்கிழமைமுதல் (நவ. 26) இம்மாதம் 28ஆம் தேதி வரை விருப்ப மனு கொடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலா் கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை: நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, கோவில்பட்டி, விளாத்திகுளம் பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட கோவில்பட்டி நகராட்சி உறுப்பினா் பதவி, கடம்பூா், கயத்தாறு, கழுகுமலை, எட்டயபுரம், விளாத்திகுளம், புதூா் ஆகியோா் பேரூராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு அதிமுக சாா்பில் போட்டியிட விரும்புவோா் உரிய கட்டணம் செலுத்தி விருப்ப மனுக்களைப் பெற்று பூா்த்தி செய்து வழங்கலாம். நகா்மன்ற உறுப்பினா் பதவிக்கு ரூ. 2,500, பேரூராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு ரூ. 1,500 கட்டணம்.

கோவில்பட்டியில் இனாம்மணியாச்சி விலக்கருகே உள்ள கும்பகோணம் டிகிரி காபி கடை பின்புறமுள்ள கட்சி அலுவலகத்திலும், விளாத்திகுளத்தில் சக்திவிநாயகா் திருமண மண்டபத்திலும் விருப்ப மனு வழங்கப்படுகிறது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.