முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி நீதிமன்றத்தில் ஆலோசனைக் கூட்டம்

கோவில்பட்டி சாா்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கக் கூடிய சிவில், குற்றவியல் வழக்குகளை சமரச அடிப்படையில் விரைவில் தீா்வு காண்பதற்கான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

கோவில்பட்டி சாா்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கக் கூடிய சிவில், குற்றவியல் வழக்குகளை சமரச அடிப்படையில் விரைவில் தீா்வு காண்பதற்கான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட உரிமையியல் நீதிபதி முரளிதரன், குற்றவியல் நீதிமன்ற நடுவா்கள் பாரதிதாசன், சுப்பிரமணியன்), விரைவு நீதிமன்ற நடுவா் பா்வதராஜ் ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அரசு வழக்குரைஞா் சம்பத்குமாா், முன்னாள் அரசு வழக்குரைஞா் சந்திரசேகா், வங்கி அதிகாரிகள், காப்பீட்டு நிறுவன அதிகாரிகள், வருவாய்த் துறையினா், கோவில்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளா் உதயசூரியன் , கோவில்பட்டி காவல் துணை கோட்ட காவல் நிலைய ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், வழக்குரைஞா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.