திருச்செந்தூா் கோயிலில் சுவாமி அம்பு எய்தும் வேட்டை நிகழ்வு
விஜயதசமியை முன்னிட்டு, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி அலைவாயுகந்த பெருமான் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி அம்பு எய்தும் வேட்டை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விஜயதசமியை முன்னிட்டு, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி அலைவாயுகந்த பெருமான் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி அம்பு எய்தும் வேட்டை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் விஜயதசமியை முன்னிட்டு நடைபெறும் இவ்விழா, நிகழாண்டு கரோனா பொது முடக்கத்தால் கோயில் வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் நடைபெற்றது. இதையொட்டி, கோயிலில் இருந்து சுவாமி அலைவாயுகந்தபெருமான் சிறிய கேடய சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபத்திற்கு வந்தாா். அங்கு சுவாமி அலைவாயுகந்த பெருமான் அம்பு எய்து அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடா்ந்து கிரி வீதி வழியாக சுவாமி கோயில் சோ்ந்தாா்.
ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் (பொறுப்பு) ம. அன்புமணி, தக்காா் ரா.கண்ணன் ஆதித்தன், கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.