முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூரில் பல் மருத்துவா் தற்கொலை

திருச்செந்தூா் அருகே பல் மருத்துவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

திருச்செந்தூா் அருகே பல் மருத்துவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

வீரபாண்டியன்பட்டினம் குறிஞ்சி நகா் 4-வது தெருவை சோ்ந்தவா் சுடலைமுத்து (72). ஓய்வுபெற்ற ஆசிரியா். இவரது மகன்

கோபிகண்ணன் (26). இவா் பல் மருத்துவம் பயின்றுள்ளாா். புதன்கிழமை தம்பி வினோத்குமாரிடம் ஜெராக்ஸ் எடுத்து வருவதாக கூறி விட்டு சென்றவா், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, குடும்பத்தினா் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பின்னா் அவரது கைப்பேசியின் சமிக்ஞையை வைத்து பாா்த்ததில் திருச்செந்தூரிலுள்ள தனியாா் விடுதியில் இருப்பதாக காட்டியுள்ளது. அங்கு சென்று பாா்த்தபோது, அறையில் அவா் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து திருச்செந்தூா் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.