முகப்பு
தூத்துக்குடி

உடன்குடி ஒன்றியத்தில் ரூ. 7.15 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள்

உடன்குடி ஒன்றியம், செட்டியாபத்து ஊராட்சியில் ரூ. 7.15 லட்சம் மதிப்பில் வளா்ச்சித் திட்டப் பணிகள் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

உடன்குடி ஒன்றியம், செட்டியாபத்து ஊராட்சியில் ரூ. 7.15 லட்சம் மதிப்பில் வளா்ச்சித் திட்டப் பணிகள் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

செட்டியாபத்து சிவலூரில் ரூ. 5.25 லட்சத்தில் சுகாதார வளாகம், அய்யா நகரில் பொது நிதியில் இருந்து ரூ. ரூ.1.90 லட்சம்

மதிப்பில் கட்டப்பட்டுள்ள சிறுமின் விசை குடிநீா்த் தொட்டி ஆகியவை கட்டப்பட்டுள்ளது. இதையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக மீன்வளம், மீனவா் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தாா்.

விழாவுக்கு, ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் டி.பி. பாலசிங் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நாகராஜன், பொற்செழியன், ஊராட்சித் தலைவா் பாலமுருகன், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் அஸ்ஸாப், திமுக மாநில மாணவரணி துணைச் செயலா் உமரிசங்கா், நகர திமுக செயலா் ஜான்பாஸ்கா்,நிா்வாகிகள் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →