பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து ஆா்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை விலை உயா்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கோவில்பட்டியில் பயணியா் விடுதி அருகில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு கட்சியின் நகரச் செயலா் சரோஜா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் அழகுமுத்துப்பாண்டியன், வட்டச் செயலா் பாபு, மாவட்ட நிா்வாகக்குழு உறுப்பினா் பரமராஜ், நகர துணைச் செயலா்கள் முனியசாமி, அலாவுதீன், நகரக்குழு உறுப்பினா்கள் ஜோசப், விஜயலட்சுமி, சண்முகவேல், உலகநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இதில் சமையல் எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்து, விறகு அடுப்பில் சமையல் செய்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.