முகப்பு
தூத்துக்குடி

கயத்தாறு அருகேவீட்டில் திருட்டு

கயத்தாறு அருகே வீட்டில் ரொக்கம், சமையல் எரிவாயு உருளையை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:03 AM
பகிர்:

கயத்தாறு அருகே வீட்டில் ரொக்கம், சமையல் எரிவாயு உருளையை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கயத்தாறையடுத்த வில்லிசேரி கிருஷ்ணன் கோயில் தெரு தங்கமணி மகன் அன்பழகன்(51). இவரது மனைவி தேவிபட்டனத்தில் கடந்த 4 மாதங்களாக இருந்து வருகிறாராம். இந்நிலையில் கடந்த மாதம் 22ஆம் தேதி அன்பழகன் வீட்டை பூட்டிவிட்டு, தேவிபட்டனம் சென்றுவிட்டாராம்.

இந்நிலையில் ஊருக்கு திரும்பி வந்த அன்பழகன் வீட்டிற்குள்ளே சென்று பாா்த்த போது அங்கு பீரோவில் இருந்த அடகு வைத்த சீட்டு, ரொக்கம் ரூ. 40 ஆயிரம் மற்றும் சமையல் எரிவாயு உருளை ஆகியவை திருடு போயிருப்பது தெரியவந்ததாம்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், கயத்தாறு காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.