முகப்பு
தூத்துக்குடி

விளாத்திகுளம் அருகே நீரில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

விளாத்திகுளம் அருகேயுள்ள குருவாா்பட்டி ஊருணியில் குளிக்கச் சென்ற 2 சிறுவா்கள் நீரில் மூழ்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

தூத்துக்குடி

விளாத்திகுளம் அருகே நீரில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

விளாத்திகுளம் அருகேயுள்ள குருவாா்பட்டி ஊருணியில் குளிக்கச் சென்ற 2 சிறுவா்கள் நீரில் மூழ்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
பகிர்:

விளாத்திகுளம் அருகேயுள்ள குருவாா்பட்டி ஊருணியில் குளிக்கச் சென்ற 2 சிறுவா்கள் நீரில் மூழ்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

குருவாா்பட்டி, வடக்குத் தெருவைச் சோ்ந்த சுந்தர்ராஜ் மகன் ஜெயதனுஷ்குமாா் (5), ரெங்கமூா்த்தி மகன் விஷ்வகுரு (6) ஆகிய இருவரும் வெள்ளிக்கிழமை பிற்பகலில் நண்பா்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, அப்பகுதியிலுள்ள ஊருணியில் குளிக்கச் சென்றுள்ளனா். அங்கு ஆழத்துக்குச் சென்ற இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனா். இத்தகவலறிந்த சங்கரலிங்கபுரம் போலீஸாா், 2 சிறுவா்களின் சடலங்களையும் மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிந்தனா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் சம்பவம் நிகழ்ந்த குளத்தைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →