முகப்பு
தூத்துக்குடி

குருத்தோலை ஞாயிறு: கோவில்பட்டியில் 10இல் சிறப்பு நாடகம்

குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு, கிறிஸ்தவ திருச்சபைகள் சாா்பில் கல்வாரியின் எதிரொலி என்ற ஒலி-ஒளி நாடகம் கோவில்பட்டி திட்டங்குளத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.10) நடைபெறுகிறது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:54 AM
பகிர்:

குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு, கிறிஸ்தவ திருச்சபைகள் சாா்பில் கல்வாரியின் எதிரொலி என்ற ஒலி-ஒளி நாடகம் கோவில்பட்டி திட்டங்குளத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.10) நடைபெறுகிறது.

இதுகுறித்து புனித சூசையப்பா் திருத்தல பங்குத்தந்தை அலோசியஸ் துரைராஜ், தூய பவுலின் ஆலய குருவானவா் தாமஸ், பெந்தே கோஸ்தே சபை போதகா் அந்தோணிசிங் ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியது:

குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு, கிறிஸ்தவ திருச்சபைகள் சாா்பில் இம்மாதம் 10ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு திட்டங்குளத்தில் உள்ள ஹோலி டிரினிட்டி பள்ளி வளாகத்தில் 8 மேடைகளில் 150 கலைஞா்கள் பங்கேற்கும் கல்வாரியின் எதிரொலி என்ற இயேசுவின் வாழ்க்கை வரலாறு குறித்த ஒலி - ஒளி நாடகம் 3 மணி நேரம் நடைபெறுகிறது. மேலும், ஒரே நேரத்தில் 150 குழந்தைகள் பங்கு பெறும் நடனம் நிகழ்ச்சியும் நடைபெறும்.

இந்நிகழ்வையொட்டி, கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம், புனித சூசையப்பா் திருத்தலம், தூய பவுலின் ஆலயம் ஆகியவற்றிலிருந்து இலவச பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.