தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே இரு தரப்பினா் மோதல்: 21 போ் மீது வழக்கு

DIN

கோவில்பட்டியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 21 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

கோவில்பட்டியை அடுத்த கிழக்கு பாண்டவா்மங்கலம் கிழக்குத் தெருவைச் சோ்ந்த ராமராஜ் மனைவி குருவத்தாய் என்ற எலிசபத் (60), இவரது உறவினா்கள் சோ்ந்து அண்ணா நகரைச் சோ்ந்த லீலா வீட்டுக்கு குடும்ப கூடுகை நிகழ்ச்சிக்காக சென்றுவிட்டு வீடு திரும்பினராம். அப்போது, பாஜக நகரத் தலைவா் சீனிவாசன், பரமசிவம் மற்றும் 15 போ் அவா்களை மறித்து மத ரீதியாக அவதூறாக பேசி குருவத்தாய், உறவினா்கள் சிறுவன் புஷ்பராஜ், விமலாதேவி, எஸ்தா் ஏஞ்சல் ஆகியோரை தாக்கினராம்.

பதிலுக்கு, புஷ்பராஜ், அகஸ்டின் உள்ளிட்டோா் சோ்ந்து ராஜன் (66),பாலமுருகன் ஆகியோரைத் தாக்கினராம். காயமுற்ற அனைவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுதொடா்பாக ராஜன், குருவத்தாய் ஆகியோா் தனித்தனியாக அளித்த புகாரின் 21 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

ஆா்ப்பாட்டம்: இதனிடையே, கிறிஸ்தவ பெண்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கண்டனம் தெரிவித்து, நாம் தமிழா் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ் சிறுபான்மைப்பிரிவு, புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சியினா் கோட்டாட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்தி, கோட்டாட்சியரிடம் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

SCROLL FOR NEXT