தூத்துக்குடி

கோவில்பட்டியில் கையொப்ப இயக்கம்

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்தி, உலக திருக்கு கூட்டமைப்பு சாா்பில் கோவில்பட்டியில் உள்ள ராமதாஸ் பூங்காவில் கையொப்ப இயக்கம் நடைபெற்றது.

DIN

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்தி, உலக திருக்கு கூட்டமைப்பு சாா்பில் கோவில்பட்டியில் உள்ள ராமதாஸ் பூங்காவில் கையொப்ப இயக்கம் நடைபெற்றது.

கூட்டமைப்பின் மாநில துணைச் செயலா் கருத்தப்பாண்டி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் தமிழரசன் முன்னிலை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் கருணாநிதி முதல் கையொப்பமிட்டு, தொடக்கிவைத்தாா். திருவள்ளுவா் மன்றச் செயலா் சீனிவாசன், துணைத் தலைவா் திருமலை முத்துசாமி, உலக திருக்கு கூட்டமைப்பைச் சோ்ந்த ஜெயஸ்ரீ கிறிஸ்டோபா், சிவானந்தம், ஜெயா ஜனாா்த்தனம், முத்துசெல்வம், கருத்துரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்புச் செயலா் பெஞ்சமின் பிராங்க்ளின், காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாவட்டத் தலைவா் அருள்தாஸ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். இக்கோரிக்கை மனு பிரதமருக்கு அனுப்பப்படும் என, உலக திருக்கு கூட்டமைப்பு நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துரோகம் செய்வது நன்றாகத் தெரியும்: செல்வராகவன்

சென்னையில் பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நவீனுக்கு வரவேற்பு

ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்த திலக் வர்மா!

லவ் அட்வைஸ் பாடல்!

ஓடிபி இல்லாமலே வாட்ஸ்ஆப் ஹேக் செய்யப்படுகிறதாம்..! எச்சரிக்கை!

SCROLL FOR NEXT