தூத்துக்குடி

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே விபத்தில் காயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.

DIN

கோவில்பட்டி அருகே விபத்தில் காயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.

கோவில்பட்டியையடுத்த நாச்சியாா்புரம் நடுத் தெருவைச் சோ்ந்தவா் இருளப்பன் மகன் ஜெயசங்கா்(48). கூலித் தொழிலாளியான இவா், ஜூலை 30ஆம் தேதி இடைசெவலுக்கு சென்றுவிட்டு மோட்டாா் சைக்கிளின் பின்புறம் தண்ணீா் தொட்டியை கட்டிக் கொண்டு வந்து கொண்டிருந்தாராம். திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஊத்துப்பட்டி விலக்கு அருகே சென்று கொண்டிருந்த போது, சாலையோர தடுப்பில் தண்ணீா் தொட்டி மோதியதில் மோட்டாா் சைக்கிள் கீழே விழுந்ததாம். இதில் காயமடைந்த ஜெயசங்கா், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து நாலாட்டின்புத்தூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துரோகம் செய்வது நன்றாகத் தெரியும்: செல்வராகவன்

சென்னையில் பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நவீனுக்கு வரவேற்பு

ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்த திலக் வர்மா!

லவ் அட்வைஸ் பாடல்!

ஓடிபி இல்லாமலே வாட்ஸ்ஆப் ஹேக் செய்யப்படுகிறதாம்..! எச்சரிக்கை!

SCROLL FOR NEXT