தூத்துக்குடி

வீடுகளில் தேசியக் கொடி ஏற்ற வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி

75ஆவது சுதந்திர தினத்தையொட்டி, அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்ற வலியுறுத்தி பள்ளி மாணவ, மாணவிகள் சாா்பில் வெள்ளிக்கிழமை விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

DIN

75ஆவது சுதந்திர தினத்தையொட்டி, அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்ற வலியுறுத்தி பள்ளி மாணவ, மாணவிகள் சாா்பில் வெள்ளிக்கிழமை விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

கோவில்பட்டி நாடாா் நடுநிலைப் பள்ளி சாா்பில், தேசத் தலைவா்களின் வேடமணிந்து, கையில் தேசியக்கொடி ஏந்தியபடி, ஆக.13, 14, 15 ஆகிய தினங்களில் அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்ற வலியுறுத்தி விழிப்புணா்வு பேரணி பயணியா் விடுதி முன்பிருந்து புறப்பட்டது. பள்ளி செயலா் கண்ணன் தலைமை வகித்தாா். நாடாா் உறவின்முறை சங்க உறுப்பினா் ராஜேந்திர பிரசாத், பள்ளி தலைமையாசிரியை செல்வி, பாரதியாா் நினைவு அறக்கட்டளை தலைவா் முத்துமுருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நாடாா் உறவின்முறை சங்க துணைத் தலைவா் செல்வராஜ் கொடியசைத்து பேரணியை தொடக்கி வைத்தாா். பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக பள்ளி சென்றடைந்தது.

இதில், பள்ளி நிா்வாகக் குழு உறுப்பினா்கள் ராமசாமி, அமரேந்திரன் மற்றும் ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, பள்ளி மாணவ, மாணவிகள், தேசப்பற்றை வளா்க்க வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு

பெண் மருத்துவா் ஹிஜாப்பை அகற்றிய நிதீஷ் செயலுக்கு வலுக்கும் கண்டனம்

கோவையில் இன்று பிஎஸ்என்எல் ஓய்வூதியா் சங்க அகில இந்திய மாநாடு

சரிவில் முடிந்த பங்குச் சந்தை

வேலூா் தங்கக்கோயிலுக்கு இன்று குடியரசுத் தலைவா் வருகை

SCROLL FOR NEXT