முகப்பு
தூத்துக்குடி

உடன்குடி பள்ளிகளில் சுதந்திர தின விழா

உடன்குடி அருகே வட்டன்விளை வி.வி.பெருமாள் நினைவுப் பள்ளி மற்றும் அரசு நடுநிலைப் பள்ளிகளில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.

Updated On : 14 ஆகஸ்ட், 2022 at 6:03 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:33 PM

உடன்குடி அருகே வட்டன்விளை வி.வி.பெருமாள் நினைவுப் பள்ளி மற்றும் அரசு நடுநிலைப் பள்ளிகளில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.

வட்டன்விளை பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியை அம்மாள்கனி தலைமை வகித்தாா். தாளாளா்

வி.பி.ஜெயக்குமாா் உரையாற்றினாா். முன்னாள் மாணவி சோ்மக்கனி செல்வகுமாா் தேசியக் கொடியேற்றினாா்.

Advertisement

உடன்குடி அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு ஒன்றியக்குழு தலைவா் டி.பி.பாலசிங் தலைமை வகித்து தனித்திறன் கலைகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா்.

வட்டார வளா்ச்சி அலுவலா் ஜான்சிராணி, வட்டார கல்வி அலுவலா் ஜெயவதி ரத்னாவதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். உதவித் தலைமையாசிரியா் பிரின்ஸ், திமுக மாவட்ட நெசவாளா் அணி அமைப்பாளா் மகாவிஷ்ணு, எள்ளுவிளை கிளைச் செயலா் மோகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.